என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டமன்ற பொதுக்கணக்கு குழு"
- பல்லடம் நகராட்சியில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.
- கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்திட வேண்டும்.
பல்லடம்,
தமிழக சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் சுதர்சனம் எம்.எல்.ஏ, மாரிமுத்து எம்.எல்.ஏ, ராஜ முத்து எம்.எல்.ஏ., சரஸ்வதி எம்.எல்.ஏ., ஆகியோர் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களிடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் கூறியதாவது:- பல்லடம் நகராட்சிக்கு பழைய மக்கள் தொகை கணக்குபடி தினசரி 46 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 36 லட்சம் லிட்டருக்கும் மேலாக குறைவாக தண்ணீர் வருகிறது. இதனை தான் 18 வார்டு பகுதிக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லடம் நகராட்சியில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடிநீர் வழங்க வேண்டும். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடத்தில் அண்ணா நகர் முதல் பணப்பாளையம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. எனவே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்திட வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த அவர், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் தனியார் முட்டை கோழிப்பண்ணையை பார்வையிட்டனர். தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ - சேவை மையத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். பல்லடம் - பொள்ளாச்சி சாலை தரம் உயர்த்தி அகலப்படுத்தி இருக்கும் பணிகள் நிறைவடைந்திருப்பதை ஆய்வு செய்தனர் . இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாபன், நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், நகராட்சி ஆணையாளர் விநாயகம், பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணன், உதவி செயற்பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்